×

அம்பை நகராட்சியில் இன்று கழிப்பிடங்கள் கணக்கெடுக்கும் பணி

அம்பை,டிச.16: அம்பாசமுத்திரம் நகராட்சியில் உள்ள பொதுக்கழிப்பிடங்கள், சமுதாய கழிப்பிடங்களை கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற உள்ளது. இது குறித்து அம்பை நகராட்சி ஆணையர் ராஜேஷ்வரன், நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான கழிப்பிடங்கள் விழிப்புணர்வு தொடர்பாக நகராட்சி பகுதிகளில் செயல்படும் சமுதாய கழிப்பிடங்கள் மற்றும் பொதுக்கழிப்பிடங்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு மகளிர் சுய உதவிக்குழு கணக்கெடுப்பாளர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி இன்று (டிச.16ம் தேதி) நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

The post அம்பை நகராட்சியில் இன்று கழிப்பிடங்கள் கணக்கெடுக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Ambai ,Ambasamutram Municipality ,
× RELATED அம்பை அருகே பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது